கல்வியால் உயர்வோம்

சமூகம் சீர்தூக்கின் சான்றோர் சபை வேண்டும்
சந்ததிகள் உயர்ந்திட ஆன்றோராக வேண்டும்
வறுமைய கன்றிடக்கல் விவளர்ந்தாக வேண்டும்
வாழும் நம்முரிமை உலகறிந்தாக வேண்டும்

வறுமைய கற்றிவாழ்வு தரும்
வாய்மை வெல்ல அறிவும் வரும்
கல்வியே கண் திறக்கும்
அறியாமை தான் நீங்கும்


கற்றவன் சபையே
காலத்தை வெல்லும்
அயர்ந்து தூங்கிடின் -உலகம்
அழிவின் விழிம்பில் போவது நிட்சயமே


எளிய எண்ணங்கள் எண்ண மனம் எண்ணா
தெளிவான ஆற்றலால் தேர்வுகள் பெற்று
இழிவுச் செயலின் அழிவுப்பிள்ளைகள்
இல்லா திருக்க வழிவகுக்கும்


பன்மொழி பேசும் திறமையை வளர்த்து
தன் மொழி ஆளுமை வையகத்தில் உயரும்


இதனைத் தக்க தகவலாய்த் தந்த நறுந்தொகை
தாளம் இட்டே இசை இசைக்கும்


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இச்சைச் செயல்கள் அற்க நன்றே
கச்சை கட்டினும் கற்க நன்றே
காதல் கொள்வீர் கல்வியில் இன்றே


கல்வி மறந்து வாழ்வில் தவழ்ந்து
எள்ளி நகையாட ஏரியில் விழுந்து
சொல்லி நொந்து சோகத்தில் மூழ்ந்து
கிள்ளி விளையாடும் மாந்தர்க்குத்
துள்ளி விளையாடும் பருவத்துக் கல்வி
துணையாகும் வாழ்வில் தூணாய் நிற்பதற்கே


அள்ளிக் கரம் நீட்டும் அன்புக் கிராயமியக்
கல்வி நிறுவனத்தின் அடுத்த முயற்சியே
இணைய வலயத்தின் இணைநாள் செய்தி
வறுமையால் கல்வி வலுவிழந்தோர்
வந்தேதம் செய்தியினை வழங்கிடத்தானே
வழி சமைத்தார் கி.க.அ.நிறுவனம்
எளிதாய் நாடி ஏழ்மையை அகற்றிடப்
பழுதாய் இருப்பது படிப்புக்கு வறுமையே


அரிதாய் அகற்றும் அற்றார் கல்விப் பசிதனை
ஆண்டு இருபத்தொன்பதற்கு மேலாய்ச் சமூக அக்கறை கொண்டவர்
அவர்தம் துணையை நாடி நிற்போமே


உயரிய சிந்தனை உருவாக உரிய கல்வி உருவாக வேண்டும்
கல்வி தரும் நல்லொழுக்கம் -அதுகாட்டும் நல் சமூகச்சீர் திருத்தம்


நன்றி அக்கறையுள்ளவன்