கிராமிய கல்வி
அபிவிருத்தி நிறுவனத்தின் தோற்றம்

மனித வள அபி விருத்தி ஆய்வு நிறுவனம் இலங்கை நடப்புறவுச் சங்கம் - சுவிஸ் இணைந்து உருவாக்கியது கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் REDI 2012

சிறுவர் கல்வி வளர்ச்சி நிதி (1994-2004)

மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனம்( 2005)

இலங்கை நட்புறவுச் சங்கமும் - சுவிஸ்(2009)

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் REDI 2012

சிறுவர் கல்வி வளர்ச்சி நிதி

இலங்கையில் யுத்தம் நிகழ்ந்த போது அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் சுவிற்சர்லாந்துக்கு இடம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் 1994ம் ஆண்டு நடுப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் சிறுவர் கல்வி வளர்ச்சி நிதிக்கு இணைந்து செயற்பட முன்வந்தனர்.


மன்னார் மடுமுகாமில் சிறுவர்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிகள் தேவை என்பதை அறியக்கூடியதாக இருந்த நிலையில் அவர்களின் கல்விக்கு எங்களால் முயலுமான உதவிகளை வழங்கும் நோக்கில் மறைந்த மறை மாவட்ட ஆயர் ஆண்டகை இராயப்பு ஜோசேப் அவர்களுக்கு 24.11.1994 ல் எங்களுடைய நிலைப்பாடும் சிறுவர்கல் விவளர்ச்சிக்கு உதவி செய்ய விரும்புகின்றோம் என்றும் கடிதம் எழுதி இருந்தோம்.


அதற்கு பதில் அளிக்கும் வகையில் 21.12.1994 ல் ஆண்டகை அவர்கள் பதில் எழுதியிருந்தார் அதில் கல்வித்தேவை அதிகமாக உள்ளதென்றும் இத்திட்டம் தனது நேரடிப்பார்வையின் கீழ் அமுல் படுத்தப்படுமென்றும் மடு அகதி முகாமும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்படல் வேண்டுமென்றும், நாம் 1995 தைமாதம் தொடக்கம் உதவிவழங்கி செயற்படுத்தமுடியும் என்பதுடன் வங்கிவிபரமும் அனுப்பிவைத்தார். நாங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு 1995 பங்குனி மாதம் தொடக்கம் உதவி செய்வதென்று முடிவுசெய்தோம்.


சிறுவர்களின் கல்வி வளர்ச்சி நிதிக்கு உதவி செய்ய சமூகவளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள், நண்பர்கள்என 50 பேர் இணைந்து கொண்டார்கள்.


முதல்கட்டமாக 50பேரும் இணைந்து 1995 பங்குனி மாதம் தொடக்கம் 1998 வைகாசி மாதம் வரை மாதாந்தம் 500 சுவிஸ் பிராங்குகள் மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிய வங்கிக் கணக்கிலக்கத்திற்கு சிறுவர் கல்வி வளர்ச்சி நிதியை அனுப்பிவைத்தோம்.


இரண்டாம் கட்டமாக மேலும் 50 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எல்லாமாக இணைந்து கொண்ட 100 பேரும் சிறுவர் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆனி மாதம் தொடக்கம் 2004 ம் ஆண்டு மார்கழி மாதம் வரையில் மாதாந்தம் 1000 சுவிஸ் பிராங்குகளை மேற் குறிப்பிட்ட வங்கி விபரத்துக்கு அனுப்பி இருந்தோம்.


சிறுவர் கல்வி வளர்ச்சி நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பணிகள்:

பாலர்பாடசாலை, சிறுவர்இல்லம், தொண்டர் ஆசிரியர்கள், தாய் தந்தையை இழந்த மாணவர்கள், வறுமையில் உள்ளக் கல்வி உதவிகள்.


மேற்படி உதவிகள் எல்லாம் மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசெப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1995 தை மாதம் தொடக்கம் 2004 மார்கழி மாதம் வரை நடைபெற்றது.


திரு கோனமலையில் தாய் தந்தையை இழந்த 200 இற்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பராமரித்து வரும் அன்பு இல்லம் திரு. ச.சுந்தரலிங்கம் ஐயா அவ ர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிவந்தது, பிள்ளைகள் பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர் அவர்களின் கல்வித் தேவையை நோக்கமாக கொண்டு அவர்களுக்கு உதவ முடிவு செய்து 1999ம் ஆண்டில் இருந்து 2004 ம் ஆண்டுவரை 250 சுவிஸ் பிராங்குகளை அனுப்பிவந்தோம் இவர்களில் பலர் பயன்பெற்றுள்ளனர் சிறுவர் கல்விவளர்ச்சி நிதியானது 2004 மார்கழி மாதம் வரை இயங்கிவந்தது.

மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் HRDRI - 2005

2010 ல் கிளிநொச்சி, முல்லைத் தீவுப்பிரதேசங்களில் பாடசாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்தவேளையில் பாடசாலை அதிபர்கள் மாணவர்களுக்கும் உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கைக் கடிதம் அனுப்பிவைத்தனர், தாய் தந்தையை இழந்த மாணவர்கள், தந்தை ஊனமுற்ற, தந்தை காணாமல்போன, தந்தை முகாமில் எனமாணவர்களுக்கு உதவி தேவைப்படுவதாக முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உதவிசெய்து வருகிறோம்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்தபோது பாரிய இடம்பெயர்வுகள் அந்தபிரதேசங்களில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தின. வவனியா பொது வைத்தியசாலை காயமடைந்தவர்கள், நோய்வாய்பட்டவர்களால் நிறைந்த நிலையில் அவர்களுக்கு அத்திபாவசியமான உதவிகள் அவசரமாக தேவை என்பதை தனிநபர்கள் வைத்திபர்கள் மூலமாக அறிந்து அத்தியாவசியமான உதவிகளை வழங்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
யுத்தத்தில் இறந்தவர்களால் வறுமை நிலைக்குச் சென்ற குடும்பங்கள், வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இவர்களில் நன்கு தெரிந்தவர்கட்கு உதவிகள் புரிந்து 2005 ம்ஆண்டு தொடக்கம் 2009ம் ஆண்டு வரைநண்பர்கள் ஒன்றிணைந்த செயற்பாடாக மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் இயங்கிவந்தது.
நண்பர்கள் மனித நேயமிக்கவர்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் உதவி செய்ய முன்வந்தார்கள். முகாம்களில் இருந்தும் உதவிகள் தேவைப்படுவதாக கோரிக்கைகள் வந்தன. அவர்களுக்கும் அத்தியாவசியமான உதவிகள் இயலுமான வரைவழங்கப்பட்டன.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் 2012

மனித வள அபிவிருத்தி ஆய்வு நிறுவனம் கல்வி ரீதியான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கிபாடசாலை செல்லும் மாணவர்களினதும் அவற்றுடன் தொடர்புடைய அடிப்படை விடயங்களையும் கவனத்தில் கொண்டு இயலுமான வரைபாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் உதவிகள் வழங்க ஆதரவும் நிதி உதவியும் போதிய அளவில் இல்லாதநிலை இருந்து வந்தது.


இலங்கை நட்புறவுச் சங்கம் - சுவிஸ் கல்வி ரீதியான செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இயலுமான வரை உதவி வழங்கமுன் வந்த நிலையில் ஆதரவும் நிதி உதவியும் தேவையாக இருந்தது வந்தது.


இலங்கை நட்புறவுச் சங்கமும் மனிதவள அபிவிருத்தி நிறுவனமும் கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து வந்த நிலையில் சந்தித்து பேச இணக்கம் ஏற்பட்டது.


யுத்தத்தாலும் உயிரிழப்புகளாலும் பொருளாதாரத்தாலும் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றன, உதவிகள் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன, ஒரு சிறிய உதவியை கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது போராட்டமாகவே இருந்தது.


மேலும் அதிபர்கள், ஆசிரியர்கள், சன சமூக நிலையங்கள், கிராமம் சார்ந்த அமைப்புகள், கல்வி நிலையங்கள், பொதுசுகாதார அமைப்புகள், இடம் பெயர் புநிலையங்கள், இழப்புகளை சந்தித்தவர்கள் என தமிழ் பிரதேசங்களில் இருந்து உதவிகள் வழங்குமாறு கோரிக்கை கடிதங்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றன


பரந்து பட்ட பிரதேசங்களை சேந்தவர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம்கோரிக்கைகளின் அவசியத்தன்மையை அந்தப்பிரதேசங்களை சேந்தவர்கள் இணைந்திருப்பின் ஆராய்ந்து உறுதி படுத்தவழிகள் எற்படும்.


மேலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப் பட்ட போதும் மாணவர்களின் கல்விக்கு உதவுவதயே முதல் நோக்கமாக கொண்டு உதவிகள் வழங்க வேண்டும் என்பதில் கருத்து ஒற்றுமை இருந்தமையால் இணைந்து செயல்பட நாங்கள் உணர்ந்ததால் மனிதவள அபிவிருத்தி ஆய்வு நிறுவனமும் இலங்கை நட்புறவுச் சங்கம் - சுவிஸ் இணைந்து 2012 ம் ஆண்டு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனம் என்று இயங்குவதுக்கு முடிவுசெய்தோம்.